இயக்குநர் சற்குணம் அவர்களால் வாகை சூட வா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானவர் இனியா, தனது முதல் படத்திலேயே மிகச் சிறப்பாக ஒரு அறிமுக நடிகை போல இல்லாமல் நடித்து அசத்தி இருந்தார்.

அவரது நடிப்பினை பார்த்த ரசிகர்கள் இனியாவிற்கு ஒரு சுற்று இருக்கு என்று தான் நம்பினர், ஆனால் அப்படி பெரிய வாய்ப்பு ஒன்றும் அவருக்கு அமையாமல் போனது, திரைப்பட உலகில் பல நேரங்களில் மிகுந்த திறமையுடன் நுழையும் பலர் அந்த அளவிற்கு வெற்றி பெற முடியாமல் போவது ஏனென்று யாருக்கு‍மே தெரிவதில்லை.

ஆனால் இனியா அதே தோற்றப் பொலிவுடனும், நம்பிக்கையுடனும் இருக்கின்றார் என்பதற்கு சாட்சியாக புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், திரைப்படத் துறையில் ஏது வேண்டுமானாலும் நடக்கலாம், பலர் ரீ எண்ட்ரியில் அசத்தியுள்ளதுக்கு பல சாட்சிகள் உண்டு.

செய்தி டிவிட்டர் திருடன்