கலைஞர் தொலைக்காட்சியின் பிரபலமான மானாட மயிலாட ஆடல் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, அதில் வெற்றியாளராகவும் தெரிவான அய்ஸ்வர்யா ராஜேஷ், 2011 திரைப்படத்துறையில் காலடி வைத்தார்.
அவரது நடிப்புத்திறனால் படிப்படியாக தமிழ்த் திறையுலகில் முன்னேறி வரும் இளம் நடிகையான இவர் மகளிர் எத்திராஜ் கல்லூரியில் பயின்ற இளங்கலை பட்டதாரி.
அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர், அட்டக்கத்தி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, கனா போன்ற திரைப்படங்களில் நடித்து தனது தனித்துவமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியர்.
இந்தி திரைப்படங்களிலும் அய்ஸ்வர்யா ராஜேஷ் நடித்து தனக்கென ஒரு இடத்தையும் பிடித்துள்ளார், இவர் பூமிகா, திட்டம் இரண்டு, டக் ஜெகதிஷ்(தெலுங்கு), துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் போன்ற படங்களில் நடித்தும் வருகின்றார்.
தமிழ் பேசும் நடிகையான அய்ஸ்வர்யா ராஜேஷை மேலும் வளர்ந்து திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க கோலிவுட் டுடே வாழ்த்துகிறது..