‍தெலுங்கு பட உலகில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான சதா அந்தப்படத்தில் சிறந்த நடிகைக்கான விருதினை பிலிம் பேர் மூலம் ‍பெற்றார், அதே ஜெயம் படத்தின் தமிழ் ரீமேக்கில் ரவியுடன் இணைந்து வெற்றிப்படமாக, ரவி ஜெயம் ரவியானார்.

அதன் பின்னால் அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே போன்ற நல்ல படங்கள் தமிழில் அமைந்தாலும் அவர் திடிரென்று காணாமல் போனார், அதற்கு அவர் இந்தி திரையுலகிற்கு வாய்ப்புத்தேடி சென்று விட்டார் என்றனர், அவரும் இந்தி திரையுலகில் தெலுங்கு, தமிழைப்போல ஒரு வலம் வரலாம் என்று எதிர்பார்த்தார் ஆனால் அது நடக்க வில்லை.

அதன் பின்னர் வெகுநாட்கள் ஆள் காணாமல் போனார், பின்னர் டார்ச்லைட் என்ற படத்தில் நடித்தார், படத்தின் கதை நன்றாக இருந்த போதும், உடன் நடித்த நடிகர்களின் நடிப்பு ஒரு தொழில் சார்ந்த நடிப்பாக அமையாமல் போனதால் படம் அவ்வளவாக ஒட வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மீண்டும் சதா தனது பழைய எழில் தோற்றத்தில் காட்சி தந்தாலும் அண்மை நாட்களாக பல இளம் புது நடிகைகள் வலம் வருவதால் தனது பழைய ‍நிலையை பிடிப்பார என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

செய்தி பிலிம்பாய்.