சென்னை மே 07 கோலிவுட் குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நடிகை நமீதா 2001 ஆம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியாவில் இரண்டாவது இடம் பிடித்தவர், இவர் 2002 ஆம் ஆண்டு முதல் நடித்தாலும் தமிழில் விஜய்காந்த்யின் எங்கள் அண்ணா படத்தில் 2004யில் அறிமுகமானார், பெரிய எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்ட அவர் எதிர்பார்த்த அளவிற்கு திரையுலகில் மின்னவில்லை.
திரைப்படங்கள் குறைந்தாலும் அவர் கோலிவுட்டிலே செட்டில் ஆகி விட்டார், பின்னர் மானாட மயிலாட நடுவர், பிக்பாஸ் போட்டியாளர் என்று வலம் வந்தார், மார்க்கெட் போனதும் தேசிய அரசியலில் சேவை செய்ய கிளம்பும் சில நடிகர்களைப்போல் இவரும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார், அதில் அவர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாக உறுப்பினராகவும் உள்ளார்.
நமீதா என்னதான் கட்சியில் சேர்ந்தாலும் அவரது தமிழ் பேச்சு அவருக்கே புரியாது, ஒரு மாநில அரசியலில் அந்த மாநில மொழியே தெரியாமல் அரசியல் செய்வது அத்தனை எளிதானது அல்ல, இதற்கிடையில் குஷ்பு போன்ற திமுகவிலிருந்து அரசியல் பாடம் பயின்று உள்ளுர் அரசியல் ஒரளவிற்கு புரிந்து, காங்கிரஸில் இணைந்து டெல்லி தொடர்புகளை உருவாக்கி வைத்திருந்தவர்கள் பி.ஜே.பி யில் சேர நமீதாவின் மச்சான்ஸ் அரசியல் அவ்வளவாக ரசிக்கப்படவில்லை.
இந்நிலையில் நடிகை நமீதா, புதிதாக ஓடிடி தளம் ஒன்றை தொடங்கி உள்ளார்.அதற்கு ‘நமீதா தியேட்டர்’ என பெயரிடப்பட்டுள்ளார். அந்த ஓடிடி தளத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்களை மட்டும் வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார்.
புதிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு இந்த ஓடிடி தளம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ள நமீதா, சிறு பட தயாரிப்பாளர்களும் இத்தளத்தில் படங்களை திரையிடலாம் என கூறியுள்ளார்.
செய்தி நாகராஜன் மற்றும் இணைய நிருபர்.