தமிழ் சினிமா டுடே சூலை 15 2020ல் தொடங்கிய கொரோனா தொற்று இன்று வரை விட்டபாடில்லை, இந்த நூற்றாண்டின் மிகப் கொடுமையான தொற்றாக விளங்கும் கொரோனா, உலகப் பொருளாதாரத்தை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்தது மட்டுமின்றி பலத்துறைகளின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி விட்டது.

கொரொனா தொடக்கத்தில் வயதான, இதய நோய் மற்றும் சக்கரை நோயாளார்களைத்தான் தாக்குகிறது என்றுக் கூறினார்கள், ஆனால் இரண்டாவது அலையில் பல இளைஞர்களும் பலியாகியுள்ளனர். அதேப்போல் ஏழை பணக்காரர்கள் என்றில்லாமல் கொரோனா எல்‍லோரையும் தாக்கி வருகின்றது.

அதேப்போல் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என பலரையும் இந்த கொரோனா பலி கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும், சென்ற ஆண்டு எஸ்.பி.பி அவர்களும் கொரோனாத் தொற்றால் மறைந்தார், அதேப்போல் சென்ற ஆட்சியில் வேளாண்த் துறை அமைச்சராகயிருந்த துரைக்கண்ணு அவர்களும் கொரோனாத்தொற்றால் இறந்தார்.

இப்போது கொரோனாத்தொற்று குறைந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் நடிகை கவிதா அவர்களின் மகன் சஞ்சய் கொரோனாத் தொற்றால் நேற்று இறந்துள்ளார் என்பது தமிழ் திரை உலகில் ஒரு பேரதிர்ச்சியான செய்தியாக உள்ளது திரையுலகில் உள்ள பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

செய்தி தமிழ்சினிமா டுடே நிருபர்.
https://www.tamilcinema.today/