சென்னை ஏப்ரல் 17 சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்பட்ட விவேக் அவர்கள் நேற்று ஏப்ரல் 16 மாரடைப்பு காரணமாக மறைந்தார், இயக்குநர் பாலச்சந்தர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு தனக்கென ஒரு நகைச்சுவை பாணியை உருவாக்கி 30 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் தனித்துவமாக விளங்கியர்.
நடிகர் விவேக் அவர்கள் ஏப்ரல் 15 அன்று கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயமின்றி போட்டுக் கொள்ள வேண்டுமென, சுகாதாரத் துறை செயலாளர் திரு இராதாகிருஷ்ணன் முன்னிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு பேட்டியும் கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டிலே மயங்கி விழுந்துள்ளார், பின்னர் குடும்ப உறுப்பினர்கள் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர், அங்கே அவருடைய இருதய வால்வில் நூறு சதவீதம் இரத்த அடைப்பினை கண்டறிந்து அதனை ஆன்ஞ்சியோ மூலம் அகற்றினாலும், அவர் அபாய கட்டத்திலேயே இருந்துள்ளார் அதன் பின்னர், எக்மா கருவி மூலம் அவரது இருதய இயக்கத்தை கட்டுபடுத்தி சிகிச்சை அளித்துள்ளனர், எனினும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்துள்ளார்.
விவேக் ஒரு நடிகராக மட்மின்றி, நல்ல சமூக சிந்தனையுடையவராகவும் விளங்கியர், இலட்சகணக்கான மரங்களை தமிழ்நாடு முழுவதும் நடுவதற்கு முன்னின்றவர், அவரது திரைப்படங்களில், நல்ல சமூக கருத்துகளை வலிந்து சொல்லி வந்தவர், அவரது மறைவு தமிழ் திரைத் துறையினர் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பசுமை வளர்ச்சிக்கும் பேரிழப்பே, அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கலை தமிழ் சினிமா டுடே தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ் சினிமா டுடே குழுவினர்