சென்னை: தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்..பிரபல திரைப்பட நடிகர் சூர்யா தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகா ஆகியோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

‍செய்தி நாகராஜன் நிருபர்.