சூலை 23 கோடம்பாக்கம் : சூலை 23 இன்று நடிகர் சூர்யா அவர்களின் பிறந்தநாள், திரைத்துறைக்கு வாரிசுகளாக ஆயிரம் பேர் வரலாம், ஆனால் ‍பொறுமையும், திறமையும் தான் அதில் நிலைத்து நிற்கச் செய்யும்.

அவர் திரைக்கு வந்த புதிதில் சாக்லெட் பாய் வேடங்களில் ‍தோன்றினாலும் தனது பங்களிப்பை சிறப்பாக தந்தும், இயக்குநர்களை அணுகுவதில் இணக்கத்தை கடை பிடித்து தனக்கென பாணியை வகுத்துக் கொண்டவர் தான் சூர்யா.

சூர்யாவின் தந்தையார், ஒரு பழமையான நடிகராக இருந்த போழ்தும், சூர்யா அதனை அதிகமாக பயன்படுத்திக் கொண்டவரில்லை. ‍அதேப்போல் நடிகர் திலகம் சிவாஜி, கமல் போன்ற பல்வேறு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்க யாரும் இப்போது இல்லை என்றச் சூழலில், சூர்யா தனது பாதையை மாற்றி பல்வேறு குணச்சித்திர வேடங்களில் தோன்றி அசத்தி வருபவர்.

சூர்யா குணச்சித்திர வேடம் மட்டுமின்றி மிடுக்கான மசாலா படங்களிலும், அதேப்போல் நகைச்சுவை வேடங்களிலும் அசத்தும் கலைஞர் தான்.

அதேப்போல் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நல்லக்கதைகளை தேர்தெடுத்து தயாரித்து அளித்து வருபவர், அண்மையில் வெளிவந்த ‍ஜெய் பீம் திரைப்படம் எல்லாத்தரப்பினராலும் பாராட்டி கொண்டாடப்பட்டது.

இவற்றையெல்லாம் தாண்டி மறையாத அடையாளமாக விளங்கி வருவதும் விளங்கப்போவதுமாக இருப்பது அவர் நடத்தி வரும் “அகரம்” அமைப்பு, அதில் எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி வளங்கி அவர்களை கை தூக்கி விடுவதை சிறப்பான வகையில் செயல் பட்டு வருபவர்.

சூர்யா தமிழ்நாட்டின் கல்விச் சூழல் உணர்ந்து, இட ஒதுக்கீட்டிற்கு அதரவு, நீட் எதிர்ப்பு, மற்றும் புதியக்கல்வி கொள்கையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதென கல்வித்துறையில் ஏழை, எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் சங்கடகளை பேசி வரும் ஒரே நடிகர் என்றுக் கூறலாம்.

23-சூலை இன்று அவரது பிறந்த நாளை கொண்டாடும் அவரது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து பிறந்தநாள் வாழ்த்தினை தமிழ்சினிமா.டுடே கூறி மகிழ்வதில் பெருமைக் கொள்கின்றது.

செய்தி
கோடம்பாக்கம் குமாரு.