தமிழ்சினிமா டுடே சூலை 12 இன்றுக் காலை சிவகார்த்திகேயன் தான் ஆண் குழந்தைக்கு தந்தையான செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் கவித்துவமாக பின்வருமாறு வெளியிட்டிருந்தார்.

“18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி அம்மாவும் குழந்தையும் நலம்”

நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய தந்தை குறித்து பல மேடைகளில் அவருடைய நெருங்கிய அன்பை வெளியிட்டிருக்கிறார், அவரு‍டைய தந்தையார் ஒரு கடமை தவறாத ஜெயிலராக பணியாற்றியவர் என்று பலரும் தெரிவித்துள்ளதை அறிவோம். அவர் தனது பணி நேரத்தில் மாரடைப்பால் இறந்த செய்தியும் அறிவோம்.

சிவகார்த்திகேயன் அவர்களின் மனதில் நீங்கா அவரது தந்தையாரின் இழப்பு அவரது ஆண் குழந்தையால் நீங்கும் என்பதோடு இந்த அவரது மகிழ்ச்சியான தருணத்தில் அவருக்கு தமிழ்சினிமா டுடே சார்பில் வாழ்த்துவோம்.

செய்தி தமிழ்சினிமா டுடே நிருபர்.
https://www.tamilcinema.today/