சென்னை ஏப்ரல் 14 தமிழ் கலை உலகில் தனக்கென தனி பாணி அமைத்து, எம்.ஜீ.யார், சிவாஜி போன்றோருக்கு முன்னோடியாக இருந்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள், அன்றைய முன்னனி நடிகர் எல்லோரிடமும் அவரது சாயலைக் காணலாம் ஆனால் ஏம்.ஆர் ராதா அவர்கள் யாருடைய சாயலும் இல்லாத தனி பாணியில் நாடகம் மற்றும் திரைத்துறையில் இயங்கியவர்.

எம்.ஆர்.ராதா அவர்களின் நாடகங்கள் ஒரு காலத்தில் அரசாங்கத்தை அதிர செய்வதாக அமைந்தவை, அவரது இரத்தகண்ணீர், தூக்குமேடை, இராமாயாணம் போன்றவை எதிர்ப்புகளுக்கி‍டையே மக்களின் அதரவினை ‍பெற்று வலம் வந்தவை, சுயமரியாதைக் கொள்கையை தனது இலட்சியமாக வாழ்ந்த மாபெரும் கலைஞர்.

செய்தி நிருபர் தமிழ்சினிமா டுடே