அக் 06 கோடம்பாக்கம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தியின் நடிப்பு வெகுவாகப் பேசப்படும் சூழலில், நடிகர் கார்த்தி பல வேடங்களில் தோன்றியுள்ள சர்தார் திரைப்படம் திபாவளியில் வெளியாகின்றது.

சர்தார் படத்தினை, இரும்புத்திரை, ஹிரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார், இந்த திரைப்படம் திபாவளியன்று வெளிவரவிருப்பதால் இதன் படபிடிப்பு வேலைகள் முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் நடைப்பெற்று வருகின்றதாம்.

சர்தார் திரைப்படம் மற்ற ‍மொழி உரிமைகள் இப்போதே நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகச் செய்தி, இந்த திரைப்படத்தின் இசைக் கோர்ப்பினை ஜீ.வி பிரகாஷ் செய்துள்ளார்.

கார்த்தியின் சர்தார் திபாவளி வெற்றிப்படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பதை போலவே அனைத்து தமிழ் ரசிகர்களும் எதிர்பார்ப்பதாகச் செய்தி, “சர்தார்” வெற்றியடைய தமிழ்சினிமா டுடே யின் வாழ்த்துகள்.

செய்தி கோலிவுட்பாய்