சென்னை: தெலுங்கில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படம் வாயிலாக அறிமுகம் ஆகிறார் நடிகர் தனுஷ்.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மூன்று மொழிகளில் நடித்து வரும் தனுஷ், அடுத்தபடியாக சேகர் கம்முலா இயக்கும் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்நிலையில இந்த படம் ரூ. 120 கோடி பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை ரூ. 20 முதல் 25 கோடி பட்ஜெட்டிகளில் படங்களை இயக்கி வந்துள்ள சேகர் கம்முலா தனுசுடன் இணையும் படம் மூன்று மொழிகளில் உருவாவதால் முதன்முதலாக 120 கோடியில் ஒரு படத்தை இயக்கப்போகிறார்.

இந்த படத்தில் தனுஷின் சம்பளம் 50 கோடி என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், தனுஷின் மார்க்கெட் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பரந்து விரிந்துள்ளதால், மெகா பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளார்களாம்.

செய்தி நாகராஜன் நிருபர்.