சென்னை மே 01 ந‍‍டிப்பில் வித்தியாசம், பழகுவதில் தனித்தன்மை என தனக்கென ஒரு பாணியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் வலம் வரும் தல என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அஜீத் அவர்களின் 50 வது பிறந்த நாள் இன்று மே 01 அன்று அவர்களது ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றது.

அஜீத் தனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டங்களை கொரோனா தொற்று அறிவுறுத்தலை பின்பற்றி செய்ய வேண்டும் என்று தனது ரசிகர்களிடம் வேண்டிக் கொண்டதாக அவரது ரசிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தல அஜீத் அவர்களின் 50 வது பிறந்தநாள் கொண்டாத்தில் இணைவதில் தமிழ் சினிமா டுடே மகிழ்கின்றது.

செய்தி தமிழ் சினிமா டுடே.