அகஸ்ட் 20 கோடம்பாக்கம்: ஆதி மற்றும் ஹன்சிகா இவர்கள் நடிக்கம் நீண்ட இடைவெளிக்கு பின் வெளியாகும் திரைப்படம் தான் “பாட்னர்“.

பாட்னர் திரைப்படத்தை புதிய இயக்குநரான மனோ தாமோதரன் இயக்குகின்றார், இந்த திரைப்படத்தில் ஆதி மற்றும் ஹன்சிகாவுடன், பாண்டியராஜன், யோகி பாபு, பாலக் லால்வானி, ஜான் விஜய், ரவி மரியா, ரோபோ சங்கர், தங்க துரை என நடிகர் பட்டாளம் இணைந்துள்ளது.

இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவினை ஷபிர் அகமது செய்துள்ளார், சந்தோஷ் தயாநிதி இசைமைத்துள்ளார், ராயல் பர்சுனா நிறுவனம் இந்த திரைப்படத்தினை தயாரித்துள்ளது.

நடிகர்களின் கூட்டைப் பார்க்கும் போது இத ஒரு நல்ல நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. அண்மையில் வெளியாகியுள்ள டீசர் மக்களின் வரவ‍ேற்பை பெற்றுள்ளது.

பாட்னர் தயாரிப்புக் குழுவினர் இந்த திரைப்படம் இந்த மாதம் இறுதிவாக்கில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.

செய்தி கோடம்பாக்கம் கோவிந்தன்
தமிழ்சினிமா.டுடே