சூலை 16 கோடம்பாக்கம் விளையாட்டில் தல என்றாலே அது தோனி தான், தோனியே அவரது வாயால் தமிழ் மக்கள் என்னை தத்தெடுத்து விட்டார்கள் என்று அன்மையில் கூறியது யாவரும் அறிந்ததே, தல தோனி இப்போது தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் முதல் தயாரிப்பாக “Lets get Married” (LGM) என்ற திரைப்படத்தை தயாரிக்கின்றது.

இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் இவானா ஆகியோர் நாயகன், நாயகி வேடமேற்க, யோகி பாபு, நதியா ஆகியோரும் நடிக்கின்றனர் இப்படத்தினை ரமேஷ் தமிழ் மணி இயக்குகின்றார்.

இந்த திரைப்படத்தின் தொடக்க விழாவில் பேசிய தோனியின் துணைவியார் சாக்ஷி, இது அவர்களது நெருங்கிய நண்பர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்றும் அதனை ஏன் திரைப்படமாக உருவாக்கக்கூடாது என்கின்ற எண்ணத்தில் அவர்களது முதல் தயாரிப்பே, அதனை திரைப்படமாக எடுக்க உள்ளதாக விழாவில் கூறியுள்ளார்.

செய்தி கோலிவுட் பாய்