கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அவரது துணைவியார் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடிக்க 800 என்ற பெயரில் திரைப்படம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

முத்தையா முரளிதரன் ஒரு தமிழராக இருந்த போதும் அவர் சிங்கள இனவாத அரசுக்குத்தான் எப்போதும் அதரவாக பேசி வருபவராக உள்ளார் என்று தமிழக்த்திலும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் விஜய் சேதுபதி அதில் நடிக்கக் கூடாது என அவருக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

‍விஜய் சேதுபதியின் தரப்பில் பல்வேறு விளக்கங்கள் சொல்லி வந்தாலும் இறுதியில் 800 படத்தை அவர் கை விடப்போவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.