முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு 800 என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்குவதற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி அதன் முதல் பார்வையாக பல புகைப்படங்கள் வெளியாயின.
இந்த முதல் பார்வை புகைப்படங்களை பார்த்து பல தமிழ் இயக்கங்கள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தன, திரைப்பட உலகில் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் கூட தனது எதிர்ப்பை கடிதமாக விஜய் சேதுபதிக்கு எழுதினார்.
பல்வேறு தரப்புகளிலிருந்து வந்த எதிர்ப்பு விஜய் சேதுபதிக்கு நெருக்கடியும், தர்ம சங்கடமுமாக இருந்த நிலையில், இன்று முத்தையா முரளிதரன் தரப்பிலிருந்து விஜய் சேதுபதியை அந்த திரைப்படத்திலிருந்து அவரது நலன் சார்ந்து விலக்குவதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை விஜய் சேதுபதி அவர்கள் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.