வாலி படத்தின் மூலம் திரைத் துறைக்கு அறிமுகமாகி 30க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து தனக்கென தனி முத்திரையை திரையுலகில் பதித்தவர் தான் ஜோதிகா.

நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ‍ஜோதிகா அவர்கள் அவரைப்போலவே சமூக அக்கறையுடன் பேசக் கூடியவர், அண்மையில் அவர் தஞ்சை பெரிய கோயிலுக்கும், மருத்துவமனைக்கும் சென்று வந்து பேசிய பேச்சு ‍பெரிய சர்ச்சையை உண்டாக்கினாலும், பொது மக்கள் அவர் கூறிய உண்மையை அறிந்து அவரை அதரிக்கவே செய்தனர்.

18 ஆக்டோபர் 1978 மும்பையில் பிறந்த ஜோதிகா இன்றுடன் 41 வயதை தொடுகின்றார், திருமணத்திற்கு பின்பு தனக்கு முக்கியத்துவம் தரும் படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார், நல்ல சமூக அக்கறையுள்ள படங்களையே தந்தும் வருகின்றார், அவருக்கு தமிழ் சினிமா டுடே பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.