அண்மையில் இயக்குநர் வெற்றிமாறன் கனடா சென்று அங்குள்ள திரையுலகத்தால் சிறப்பிக்கப்பட்டு திரும்புகையில், அவருக்கு ஹிந்தி தெரியாது என்று சொன்னதற்காக, டெல்லி விமான நிலையத்தில் ஒரு குற்றவாளிப் போல நிற்க வைக்கப்பட்டதாக கூறியிருந்தார், சினிமாகாரர்கள் இது போன்ற மொழி, மற்றும் கலாச்சார பிரச்சனைகளில் மெளமாகவே கடந்துச் செல்லும் நிலையில் தற்போது I am a தமிழ் பேசும் Indian என்ற வாசகம் அடங்கிய டி சர்ட் அணிந்து யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் அவரைத் தொடர்ந்து, சாந்தனு, அய்ஸ்வர்யா ராஜேஷ் இன்னும் பல இளைய நடிகர்கள், இது போன்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்களை அணிந்து வருகின்றனர், மேலும் #ஹிந்தி_தெரியாது_போடா என்ற # டாக் மிக வேகமாக வலைதளங்களில் பிரபலமாகி வருகின்றது.