பிளாக் பேன்தர், 21 பிரிட்ஜஸ் தி 5 பிளட்ஸ்(Da 5 Bloods) போன்ற ஆலிவுட் படங்களில் நடித்த சிறந்த ஆலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் ஆகஸ்ட் 20ந்தேதி பெருங்குடல் புற்றுநோயின் காரணத்தால் மறைந்தார், இவருக்கு இந்த பெருங்குடல் புற்றுநோயின் பாதிப்பு 2016யிலிருந்து இருந்த போதும் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டே சிறந்த படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளிவந்த Da 5 Bloods படத்தில் குறைந்த காட்சிகளில் தோன்றினாலும் அவருடைய சிறந்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருப்பார்.