சிம்பு தனது முந்தைய படங்களில் தனது கட்டுக்கோப்பான உடம்பை இழந்து கொஞ்சம் சதை போட்டு தோற்றத்துடன் வந்தார், அது அவரது ரசிகர்களே விரும்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த கொரோனா காலத்தில் நல்ல உடற்பயிற்சி செய்து தனது பழைய தோற்றத்திற்கு வந்து அதனை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார், அந்த கெட்டப் தான் அவர் இயக்குநர் வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் வரும் கெட்டப் என்று கூறுகின்றனர்.
மாநாடு படத்தில் அப்துல் காலிக் என்கிற பெயரில் தோன்றி நடிக்கவுள்ளார் என்றும் அதன் படபிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. வாழ்த்துக்கள் சிம்பு வந்து கலக்குங்க.