புதிய தோற்றதில் மீனா

குழந்தை நட்சத்திரமாக ரஜினி படத்தில் தோன்றி பின் எஜமான் படத்தில் ரஜினிக்கே கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை மீனா, சிறப்பான நடிப்பாலும் கலக்கலான நடனத்தாலும் கவர்ந்த மீனா,பின்னர் அஜீத் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.

விஜய் தனக்கு மிகவும் பிடித்த நடிகை மீனா என்றுச் சொன்னாலும், மீனா விஜய்க்கு இணையாக நடித்ததில்லை, ஆனால் அதனை போக்கும் விதமாக ஷாஜகான் படத்தில் சரக்கு வைச்சிருக்கேன் என்ற ஒற்றைப்பாடலுக்கு விஜயுடன் ஆடினார்.

கொஞ்ச‍ம் கொஞ்சமாக தமிழை விட்டு மலையாள படங்களில் நடித்த மீனா தனது உடலை கவனிக்காமல் நல்ல எடையை போட்டு குண்டாகத் தோன்றினாலும் திரிஷியம் போன்ற படங்களில் அப்படியே நடித்தாலும் நடிப்பில் அசத்தினார்.

இப்போது தனது உடல் எடையை குறைத்து நல்ல சிலிம்மாகியுள்ளார், கண்டிப்பாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் தமிழில் தோன்றி மிண்டும் கலக்குவார் என்பதில் சந்‍தேகமில்லை.