இந்திய இரசிகர்களின் மனங்களில் நீங்காத பாடும் நிலா எஸ்.பி பாலசுப்ரமணியம் இன்று தனது பாட்டொலியை நிறுத்திக் கொண்டார். அந்த நீங்கவொண்ணத்துயரில் தமிழ்சினிமாடாட்டுடே மற்றும் கோலிவுட்டாட்டுடே பங்கேற்கிறது.

10000 பாடல்களுக்கு மேல் பாடி கொடுத்த பாலு என்று அவரது உடன் பணியாற்றுபவர்களால் பாசத்தோடும், எஸ்.பி.பி. என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நீண்ட போராட்டத்திற்கு பின்பு உடல்நலம் தேறி, இன்னும் சில நாட்களில் வீடு வந்து சேர்வார் என்கின்ற நிலையில் இன்று மறைந்தார்.

பாட்டுலகின் இளவரசனாகவே என்றைக்கும் அவர் தமிழ் சினிமாவில் வலம் வருவார் என்பதில் எந்த வித அய்யமுமில்லை.