பாடகி சுசித்ராவைக் கொல்ல திட்டமா?

சில மாதங்களுக்கு முன்பு பாடகி சுசித்ரா சில முன்னனி நடிகர்களைப் பற்றி தனது சமூக ஊடகத்தின் மூலம் தெரிவித்திருந்த நிலையில் அவர்களின் குடும்பத்தாரின் தரப்பிலிருந்து அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் அது போன்று வெளியிட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவர் மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சைப்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது, பின்னர் சுசித்ரா தனது வழக்கமான வேலைகளைச் செய்யத் தொடங்கினார் அவர் தான் சாத்தான் குளம் கொலையைக் கூட உலக அளவில் டிரண்டாக்கினார் என்றுக் கூறலாம், அதற்கும் அவருக்கு தமிழக காவல்துறையிடமிருந்து அதனை நீக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இப்போது விஜய் டீவியில் நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் wild card எண்ட்ரி மூலமாக நுழைவார் என்றத் தகவல் கசியத்துவங்கிய நிலையில், சுசித்ரா தான் தங்கியிருந்த ஒட்டல் அறையிலிருந்து தன்னை கொல்ல முயற்சிப்பதாக அலறி அடித்து வெளியே ஒடி வந்தார் என்றுச் கூறப்படுகின்றது.

எற்கனவே மன அழுத்ததிற்கு உட்பட்டிருந்த சுசித்ராவிற்கு மீண்டும் அது போல ஏற்ப்பட்டுள்ளதா? அல்லது பிக்பாஸ் நுழைவிற்கு இது ஒரு டிரைலரா என்றுத் தெரியவில்லை என பலர் பேசிக் கொள்கின்றனர். எதுவாயினும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு வீட்டிற்குள் சிலருடன் பல நாட்கள் தங்கியிருக்கும் நிகழ்ச்சி என்பதால் உண்மையில் இவர் மன அழுத்ததிற்கு ஆளாகியிருந்தால் இது அவரது மனதில் மேலும் பெரிய அழுத்ததை உண்டு பண்ணும் என்றும் சொல்லப்படுகின்றது.