தமிழ் திரையுலகில் பெரும்பாலும் புராணக் கதைகளைக் கொண்டு திரைப்படங்கள் வந்த வேளையில் சமூகப் படமாக மட்டுமின்றி சமூகத்தை கேள்வி கேட்கும் படமாக வந்தது தான் பராசக்தி அந்த திரைப்படம் வெளியான நாள் 17-அக்டோபர்-1952.

பராசக்தியில் அறிமுக நாயகனாக வந்த நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் அந்த ‍ஒரேப் படத்தில் திரைப்பட உலகின் உச்சம் தொட்டவர், அந்தப்படத்தில் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதி அதனை அன்றைய சினிமா துறையில் அடியெடுத்து வைப்பவர்கள் மட்டுமல்லாது சாமனியர்களை மனப்பாடம் செய்ய வைத்தவர் முத்தமிழ் வித்தகர் கலைஞர் அவர்கள்.

சிவாஜி அவர்களின் ஒங்கி ஒலித்த வசனங்கள் மட்டுமல்லாது அவரது மெனரிசம் என்றுச் சொல்லப்படும் உடல் மொழிகளாலும் சினிமா ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்தார்.

ஏறக்குறைய 68 ஆண்டுகள் உருண்டோடினாலும் இன்றைக்கும் தமிழ் திரைப்படங்களின் எடுத்துக்காட்டாய் கூறப்படும் பராசக்தி திரைப்படம் கலைஞர் அவர்களின் வசனத்தாலும், சிவாஜி அவர்களின் நடிப்பினாலும் உருவாக்கப்பட்ட அழியாக் காவியம்