நவம்பர் 2 இன்று விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், கல்லூரி, கனாக்காலம் ‍போன்ற தொடர்களில் நடித்து அதில் தனது இயல்பான பேச்சாலும் நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்த நடிகர் பால சரவணன் அவர்களின் பிறந்தநாள்.

தொலைக்காட்சி தொடரின் மூலம் அனைவராலும் அறியப்பட்டு பின்னர் வெள்ளித்திரையில் தடம் பதித்தார், குட்டிப்புலி, பண்ணையாரும் பத்மினியும், ஒரு நாள் கூத்து போன்ற படங்களில் நடித்து தனது தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டியவர். பண்ணையாரும் பத்மினியும் குறும்பாடமாக வந்த போது அதில் பால சரவணன் தான் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.