பார்திபன் சென்ற ஆண்டு தனது பழைய வேகத்துடனும் நம்பிக்கையுடனும் தயாரித்து, இயக்கி வெளியிட்ட திரைப்படம் தான் ஒத்த செருப்பு சைஸ் 7, திரைப்பட வட்டாரங்கள் மட்டுமல்லாது பொது மக்களிடமும் சிறந்த வரவேற்பை பெற்ற படமாக சென்ற ஆண்டு விளங்கியது.
இத்திரைப்படத்தில் ஒரே ஒரு நடிகராக பார்த்திபன் மட்டுமே நடித்து அசத்தியிருந்தது மட்டுமின்றி அது உலக சினிமா வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக பேசப்பட்டது. பார்த்திபனும் தனது ஒத்த செருப்பு படத்தை ஆஸ்காருக்கு அனுப்பும் நோக்கில் அதற்கான வேலைகளைச் செய்து வெளியிட்டார், ஆனால் அதற்கு பதிலாக கல்லி பாய்ஸ் என்ற ஹிந்தி படத்தை தெரிவு செய்து அனுப்பினர், அந்தப்படம் ஒரு ஹாலிஹவுட் படத்தின் தழுவல் என்று எல்லோராலும் சொல்லப்பட்டது அதனால் அந்தப்படம் நுழைவிலேயே வெளியேறி விடும் என்று கூறினார்கள்.
பெரும் எதிர்ப்பார்பில் இருந்த பார்த்திபனுக்கு அது மிகப்பெரிய வருத்தத்தை தந்தது, எதையும் மனம் விட்டுப் பேசும் பார்த்திபன் தனது ஒத்த செருப்பு தெரிவாகாத ஆதங்கத்தையும் தனது பேட்டிகள் மூலம் வெளிப்படுத்தினார்.
ஆஸ்கர் செல்லவில்லை என்றாலும் ஒத்த செருப்பு பல வெளிநாடுகளில் திரையிடப்பட்டு விருதுகளை குவித்தது,
“ஒத்த செருப்பு சைஸ் 7 ” 2020 ட்ரோண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது.
“ஒத்த செருப்பு சைஸ் 7 ” 2020 ட்ரோண்டோ உலகத்தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது, குறிப்பாக ட்ராண்டோவில் நடை பெற்ற உலகத் தமிழ் சினிமா விழாவில் மூன்று விருதுகளை அள்ளியது.
இந்நிலையில் இந்திய அரசு இந்த ஆண்டு ஒத்த செருப்பை சிறந்தபடமாக தேசிய விருதுக்கு தெரிவு செய்துள்ளது, அண்மைக்காலங்களில் தமிழக திரை நட்சத்திரங்களை குறி வைத்து பா.ஜ.க தனது காய்களை நகர்த்துகிறது அதன் ஒரு பகுதியாகத்தான் பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தை மய்ய அரசு தெரிவு செய்துள்ளது என்று ஒரு பக்கம் விமர்சனமும் உள்ளது. அதற்கு அவர்கள் யாருக்கும் தெரியாத ஹவுஸ் ஒனர் படமும் தேசிய விருதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது ஒரு காரணமாக சொல்கிறார்கள்