சென்னை: திடீர் திருமணம் செய்து கொண்ட நடிகை யாமி கவுதமிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

படங்கள், விளம்பரங்கள் பல தொடர்களில் நடித்திருப்பவர் நடிகை யாமி கவுதம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். அதிகளவில் இந்தியில் நடித்துள்ளார். தமிழில் கவுரவம், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.

இவர் உரி, சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்ற படத்தின் இயக்குனர் ஆதித்யா தர்ரை காதலித்து வந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் இவர்கள் இருவரும் திடீரென்று திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் யாமி கவுதம் தெரிவித்துள்ளதாவது: “எங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் மட்டுமே எங்கள் திருமணம் நடந்து முடிந்தது. அன்பும், நட்பும் சேர இந்த பயணத்தை நாங்கள் தொடங்கும் இந்த வேளையில் உங்களின் ஆசீர்வாதத்தையும், நல் வாழ்த்துக்களையும் பெற விரும்புகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்