தனுஷை ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறு தளங்களில் காட்டி அவரை நடிப்பின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இயக்குநர்களில், வெற்றிமாறன் முதன்மையானவர் என்றேக் கூறலாம், அவருடைய முதல் படமான பொல்லாதவனில் ஒரு வட சென்னை இளைஞனாகக் காட்டி, இறுதியில் ஹாலிவுட் இணையான சண்டைக்காட்சி அமைத்து தந்தவர், அதேப்போல ஆடுகளம், தனுஷின் நடிப்பாற்றலை நன்றாக வெளிப்படுத்த அமைத்து தந்தகளமாக அமைந்தது, வடசென்னையும் அப்படித்தான், அவர்களது கூட்டனியில் அண்மையில் வெளி வந்த அசுரனில் தனுஷை இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாக காட்டி அசத்தியிருந்தார், இந்த வெற்றிக் கூட்டணி விரைவில் இணைந்து மேலும் ஒரு வெற்றிப்படத்திற்காக வேலை செய்யப்போவதாகக் கேள்வி, விரைவில் எதிர்பார்ப்போம்.