‍ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி தன் பெயருக்கு முன்னால் அந்த வெற்றி பெயரை தனதாக்கி கொண்ட நடிகர் ஜெயம் ரவி, தனது திரைப்படங்கள் வெற்றியடைய மிகுந்த சிரத்தை எடுத்து நடிக்க கூடியவர், பெரும்பாலும் அவரது படங்கள் வெற்றியாகவே அமைந்தவை ஒன்றிரண்டைத் தவிர, பேராண்மை, பூலோகம், தனி ஒருவன் போன்ற படங்கள் யாவும் அவரது வெற்றிப்படங்களே.

இவரது தந்தையார் மோகன் புகழ்பெற்ற எடிட்டர், அதேப்போல இவரது அண்ணன் ராஜா புகழ் பெற்ற இயக்குனரும் ஆவார்கள், ஜெயம், தனி ஒருவன் ‍போன்ற படங்களை தனது தம்பியான ஜெயம் ரவி வைத்து இயக்கியவர் ஆவார்.