சென்னை: கோலிவுட் முன்னணி நடிகராக உள்ள சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள படத்திற்கு 2 பாடல்கள் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிம்புவின் நடிப்பில் தற்போது மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிம்பு, கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள 10 தல என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
கன்னட சினிமாவில் வெளியான மப்ஃடி படத்தின் ரீமேக்காக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
பக்கா கேங்ஸ்டர் படத்தில் சிம்புவை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
செய்தி நாகராஜன் நிருபர்