சின்னத்திரையின் சிரிப்பு நாயகன் வடிவேல் பாலாஜி சில நாட்களுக்கு முன்பு இதய அடைப்பு ஏற்பட்டு அதனால் கை கால் செயல் இழந்ததால் அதற்கு அவர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

தனியார் மருத்துவமனைகளில் ஆகும் செலவை அவர்களது குடும்பத்தாரால் தாங்க முடியாது, அரசு ஒமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர், அங்கு கொரோனா நோயாளிகள் முழுவதும் நிரம்பி ‍உள்ளதால், சென்னை ராசிவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி மறைந்தார்.

43 வயதே நிரம்பிய வடிவேல் பாலாஜி தனது முகத்தோற்றத்தில் உடல் மொழியில் நடிகர் வடிவேலுவை போன்றிருந்தாலும் அவர் தனக்‍கென ஒரு பாணியில் நகைச்சுவை செய்து சின்னத்திரை ரசிகர்களின் நெஞ்சங்களை ஆண்டவர்.

எளிய குடும்பப் பின்னனியிலிருந்து வந்தாலும் நிறைய தன்னம்‍பிக்கையுடைய இளைஞர், கலக்கப்போவது யாரு?. அது…இது… எது போன்ற விஜய் தொலைக்காட்சிகளின் நகைச்சுவை நிகழ்ச்சிகளின் கலந்து தனக்கென முத்திரை பதித்தவர் வடிவேல் பாலாஜி, அவரது எதிர்பாராத மறைவிற்கு தமிழ்சினிமாடாட்டுடே மற்றும் கோலிவுட்டாட்டுடே ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.