புரட்சி தமிழன் என்ற அடைமொழிக்கு தகுந்து புரட்சி கருத்துகளை திரைப்படங்களில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் பேசும் நடிகர் சத்யராஜ் அவர்களின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் கோலாகலமாக இன்று அக்டோபர் 3 கோலாகலமாக கொண்டாப்பட்டது.

திரையுலகில் சிறு சிறு வேடங்களை செய்து பின்னர் ஒரு வேறுபட்ட வில்லனாக பரிணமித்து, பின் கதாநாயகனாக வெற்றிக் ‍கொடி நாட்டிய ஒரு சில நடிகர்களில் சத்யராஜ் அவர்களும் ஒருவர்.

நூறாவது நாளில் தனது வில்லத்தனத்தை காட்டியது போலவே பல ஆண்டுகளுக்கு பின் வெளியான அமைதிப்படையிலும் நடித்து அசத்தியவர்.

அண்மையில் வெளியான பாகுபலி படத்தில் மிக முக்கியமான ‍வேடத்தில் தோன்றி உலகப்புகழ் பெற்றார், அனைத்திற்கும் மணிமகுடமாக அவர் நடித்த பெரியார் படம் என்றைக்கும் பேசப்படும் என்பதில் எந்த வித அய்யமுமில்லை. அவருடைய பிறந்தநாளில் வாழ்த்துச் சொல்வதில் தமிழ்சினிமாடாட்டுடே மற்றும் கோலிவுட்டாட்டுடே பெருமைக் ‍கொள்கிறது.