29/11/1908 காலத்தை வென்ற கலைவாணர் என்,எஸ்,கே அவர்களின் பிறந்தநாள் இன்று.
நாகர்கோயில்,ஒழுகினசேரியில், சுடலைமுத்து பிள்ளை- இசக்கியம்மாள் அவர்களுக்கு மூத்தமகனாகப் பிறந்தவர்.4 ஆம் வகுப்புவரை படித்தார்.
காலையில் டென்னிஸ் அரங்கில் பந்து எடுத்துப்போடுதல்,பகலில் மளிகைக் கடையில் பொட்டணம் மடித்தல், இரவு நாடகக்கொட்டகையில் சோடா,கலர் விற்பது என பல வேலைகளை ஓய்வின்றி செய்தவர்.
பின் அதே நாடக நடிகராகி, 1936 ல் ‘சதிலீலாவதி’ படத்தில் அறிமுகமாகி 150 படங்கள் வரையில் நடித்து, சொந்க் குரலில் பாடி, பணம், மணமகள்என்ற இரு படங்களை இயக்கினார்.
மகாத்மா காந்தியின் மீது கொண்ட பற்றினால், காந்திக்கு அப்போதே 50 ஆயிரம் ரூபாய் செலவி்ல் நினைவுத் தூண் அமைத்தார்.
சமூக சீர்திருத்தக் கருத்துகளை, பெண் விடுதலை, சமத்துவம், மனிதநேயமிக்க சிந்தனைகளை தரமான நல்ல நகைச்சுவை மூலம்..நாட்டு மக்களுக்குச் சொன்னவர்.
“நாட்டுக்குச் சேவை செய்ய வந்த நாகரீகக் கோமாளி நான்” என்று தன்னை அறிவித்தவர். 30/08/1957ல் தமது 49 வது வயதிலேயே வயிற்றில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக மருத்துவமனையிலேயே மறைந்தார்.
நடிகருக்கு, நகைச்சுவை நடிகருக்கு சிலை வைத்து மகிழ்ந்தது தமிழ்நாடு அது கலைவாணருக்கு மட்டும் தான் இன்று அவரது 112 ஆம் பிறந்தநாளை தமிழ்நாடு கொண்டாடி மகிழ்வதற்கு காரணம் அவர் ஒரு நடிகர் மற்றுமல்ல தனது நடிப்பால் சமூக மாற்றத்திற்கு பங்காற்றியவர்.