சென்னை: ஓடிடி தளத்திற்காக இயக்குனர் ஏ.எல்.விஜய் அடுத்ததாக ஒரு படத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தெய்வத்திருமகள், தாண்டவம், மதராசப்பட்டினம், தலைவா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள தலைவி படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் அடுத்ததாக ஓடிடி தளத்திற்காக ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் மஞ்சிமா மோகன், நிவேதா பெத்துராஜ், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜான் ஆகிய 4 நடிகைகள் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில பிரபல தெலுங்கு நடிகர் விஷாகா சென் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

செய்தி நாகராஜன் நிருபர்