சென்னை: நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள ‘கூழாங்கல்’ திரைப்படம் உக்ரைனில் நடக்கும் ‘மோலோடிஸ்ட்’ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ படத்தை தங்களது ‘ரெளடி பிக்சர்ஸ்’ சார்பாக தயாரித்துள்ளனர் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி.
இந்த படம், நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டு விருதையும் வென்றது. இந்த விருதை வெல்லும் முதல் தமிழ் படம் என்ற சாதனையையும் செய்தது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டில் கடந்த 50 வருடங்களாக நடைபெற்றுவரும் ‘மோலோகிஸ்ட்’ சர்வதேச திரைப்பட விழாவில், இப்படம் திரையிட தேர்வாகியிருக்கிறது. பிரபல ஹாலிவுட் பட இயக்குநர்களின் படங்கள் இங்கு திரையிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.